கொரோனா வைரஸ் -Prevention Methods

Corono Virus Tamil

கொரோனா வைரஸ்:

ஏன் கொரோனாவை கண்டு உலகமே அஞ்சுகிறது.. காரணம் இதுதான்...

கொரோனா வைரஸ். நோய் வருவதும் அதை குணப்படுத்தவோ அல்லது கட்டுக்குள் வைப்பதோ எப்போதும் நிகழ்வுதான். ஆனால் நோய்க்கான காரணம் அறிந்து அதை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்குள் ஓராயிரம் உயிர்களாவது பலியாகிவிடுகிறது. இப்படி உலகில் எந்த மூலையில் எந்த நோய் பரவினாலும் உலக நாடுகள் அனைத்துமே கைகோர்த்து அந்த நோயை கட்டுப்படுத்தவும், அதற்கு தீர்வு காணவும் முழு வீச்சில் இறங்குவதுண்டு. ஒரு சில மாதங்களாக மருத்துவத்துறையை படு வேகமாக செயல்பட வைத்தி ருக்கிறது இந்த கொரோனா வைரஸ். சாதாரண வைரஸ் தொற்றுதான் இது என்று கடந்துவிட முடியாமல் ஆளை கொல்லும் இந்த வைரஸை கண்டு தான் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்திருக்கின்றன. ஏன் கொரோனாவை கண்டு இவ்வளவு பீதி என்கிறீர்களா? படியுங்கள் உங்களுக்கே புரியும்...

கொரோனா வைரஸ் கண்டுப்பிடிப்பு

சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுகான் மாநிலத்தில் ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்றார். அதிகப்படியான காய்ச்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அவருடைய உடல் பலவீனம் அடைந்திருக்கிறது. இதே போன்று மக்கள் தொடர்ந்து மருத்துவரிடம் வரும் போது மருத்துவர்கள் இது புதிய வைரஸால் ஒரு தொற்று பரவி இருப்பதை உணர்ந்து கண்டறிந்தார்கள். இது நடந்தது டிசம்பர் 31 ஆம் தேதி நடந்தது.

இதை தொடர்ந்து சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் இதை உறுதி செய்து மக்களுக்கு விழிப்பு ணர்வை தீவிரமாக செய்ய தொடங்கியது. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக தாமதிக்கமால் மருத்துவரை அணுகவும் வலியுறுத்தியது. தற்போது சீனாவின் வுகான் மாநிலத் திலிருந்து உலக நாடுகள் அனைத்துக்கும் தொற்று பரவ தொடங்கி உயிர்பலிகளையும் வாங்க தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் - Story

சீனாவில் இருக்கும் மத்திய நகரம் வுகான் மாநிலம். இங்கு 1 கோடி 10 இலட்சம் மக்கள் வசித்து வரு கிறார்கள். இங்கிருக்கும் மக்களுக்குத்தான் இந்த வைரஸ் தொற்று தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட இந்நகரத்திலிருந்து தொடங்கிய இந்த வைரஸ் தொற்றுக்கு காரணம் இந்த மாநிலத்தில் இருக்கும் மிகப்பெரிய இறைச்சி மற்றும் கடல் உணவுகள் கொண்ட சந்தைபகுதி என்று கண்டறிந்தார்கள்.

சீன நாட்டில் அதிகப்படியான விலங்குகளின் ( ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட விலங்குகளையும்) இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள்.இந்த இடத்தில் இருந்து தான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்தில் பரவியிருப்பதாக கண்டறிந்துள்ளது. இப்படி தான் விலங்குகளிடைருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்த வைரஸானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும் என்றும் சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள்

கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்னமாதிரியான அறிகுறிகள் இருக் கும் என்பதையும் சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது

முதலில் காய்ச்சலில் தொடங்கும். அதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும். அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவைபடிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்த தொற்றால் பரவதொடங்கிய பலி எண்ணிக்கை உலக நாடுகள் முழுவதிலும் தற்போது வரை 5000 ஐ எட்டியுள்ளது என்பது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. சாதாரண காய்ச்சல் என்று போதிய விழிப்புணர்வு இல்லாமல் இந்த வைரஸ்தொற்றுக்கு உள்ளானவர்களும் பலர் இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அவர்களையும் கணக்கில் எடுத்தால் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் பட்டியல் மேலும் நீளும் என்றும் சொல்கிறார்கள்

தொற்று பரவும்

விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு பரவிய கொரனா வைரஸ் எப்போது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதோ அப்போதே மனிதனிடமிருந்து மனிதனுக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடும் அபாயம் உண்டு. இதை சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அதே போன்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) மனிதனுக்கு மனிதன் இந்த கொரனா வைரஸ் தொற்று பரவுகிறது என்று உறுதி செய்துள்ளது. இவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.

வருமுன் காப்பது

உங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவினாலே வைரஸ் தொற்றிலிருந்து உங்களை எளிதாக பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். சோப்பில் இருக்கும் வெளிப்புற கொழுபு அடுக்கு வைரஸை கொன்று வெளியேற்று என்பதால் இதுவே சிறந்த பாதுகாப்பானது. அதே நேரம் கைகளை கழுவாமல் வாய்க்கு அருகில் மூக்குக்கு அருகில் தொடவோ, தேய்க்கவோ வேண்டாம் என்பதையும் கவனியுங்கள்

For more Details

Corona Virus Prevention Methods

Comments