கொரோனா வைரஸ் -Full explanation

Corona Virus

முகத்துக்கு முகமூடி(Face Mask) போட்டுகிட்டா கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியுமா? உண்மை என்ன?

;

சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை கொண்டு இந்த வைரஸ் தொற்றை கண்டறியலாம். மேலும் இந்த தொற்று பாதித்த ஒருவரிடமிருந்து வேகமாக மற்றவர்களுக்கு பரவிவிடுகிறது. வைரஸ் தொற்று பாதித்த ஒருவர் இருமும் போதும், தும்மும் போது அருகில் இருப்பவர்களை எளிதில் அடைகிறது. மேலும் அவரை தொடுவதன் மூலமும் கைகுலுக்குவதன் மூலமும், கட்டிஅணைப்பதின் மூலமும் கூட இந்த தொற்று எளிதில் வேகமாக பரவுகிறது.

பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அதிகம் செல்லவேண்டாம். வெளியிலிருந்து வந்ததும் கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்த பிறகு சாப்பிட வேண்டும். வெளி இடங்களில் எந்த பொருள்களையும் உள்ளங் கையில் அழுத்தி தொடுவதும் பிடிப்பதும் கூட தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய இந்த நேரத்தில் குறிப்பாக அனைவரது கவனமும் முகமூடியின் மீது திரும்பியுள்ளது.

வைரஸ் தொற்று வராமல் இருக்க முகமூடி அணிந்தால் போதும் என்று நினைத்து எல்லோரும் முகமூடி அணிந்து கொள்கிறார்கள். இதனால் எந்த தொற்றும் வராது என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆரோக்கி யமாக இருப்பவர்கள் முகமூடி கவசம் அணிய வேண்டாம். இதனால் சுவாசக்குழலுக்கு அழுத்தம் உண்டாகும். பின்னாளில் அது சுவாசப் பிரச்சனைகள் உண்டாக்க வாய்ப்புண்டு என்று ஐக்கிய அரபு நாடு தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து மற்ற நாடுகளும் மக்கள் ஆரோக்கியமாக இருப்பவர்கள் முகமூடி அணிய வேண்டாம் என்றே அறிவுறுத்துகின்றன.

இந்த கருத்தை உறுதிபடுத்தும் விதமாக அமெரிக்காவின் லோவா பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் மற் றும் நோய்த்தொடுப்பு தடுப்பு நிபுணரான எலி ப்ரென்விச்(Eli Prenvich) என்பவரும் தெரிவித்துள்ளார். மேலும் முகமூடி அணி வதால் வைரஸ் தொற்று பாதிக்கவில்லை என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை. அதே நேரம் நீங்கள் வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளானால் முகமூடி அணிவது மற்றவர்களுக்கு தடுக்கப்படும். அதே போன்று வைரஸ் தீவிரமும் குறையும். நீங்கள் உங்களை பாதுகாத்து கொள்ள விரும்பினால் தினமும் வெளியில் சென்று வந்ததும் தண்ணீர், சாப்பிடுவதற்கு பின்பும் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை உறுதி செய்யுங்கள். இதனால் நிச்சயம் வைரஸ் தொற்று உண்டாகாது.

கொரோனா வைரஸ் காற்று வழியாக என்பதை விட நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது. இதைநீங்கள் சுவாசிப்ப தை விட தொடுவதன் மூலமே உங்களுக்கு பரவுகிறது. என்பதால் கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவு வது உங்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று ஃபோர்பா(Porpo) பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். அப்படியனால் முகமூடி பாதுகாப்பானது இல்லையா என்று கேட்கலாம். முகமூடி யார் அணிய வேண்டும் என்ற கேள்வி யும் உங்களுக்குள் எழலாம்.

உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation)

உலக சுகாதார அமைப்பு(WHO-world Health Organisation) இந்த நோயை பற்றிய அறிக்கையை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது, கிட்டத்தட்ட 60 நாடுகள் கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கைகளை தெரிவித்துள்ளது. இதற்காக மக்கள் முகமூடி(Face mask)வாங்குவது தேவையற்றது. Seriously STOP BUYING MASKS என்ற பதிவினை US ஜெனரல் சர்ஜன் ஜெரோம் ஆடம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இப்படி முகமூடி அணிவதால் கொரானா வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது.இதுவரை மருத்துவர்கள் இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களை காப்பாற்ற இயலவில்லை. இதனால் சமூகத்தில் பெரும் சேதம் பரவி வருகிறது. அமெரிக்காவின் உயர் மருத்துவரின் எச்சரிக்கை,U.S நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் மருத்துவ ஆலோசனை கூறுவது இப்பிடி முகமூடியை (Face mask)அணிவதால் நோய் தடுக்கலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இதற்கு பதிலாக நோய்வாய் பட்டவர்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பதால் பிறருக்கு இந்த நோய் பரவால் இருக்கும். அதோடு கைகளை சோப்பு தேத்து தண்ணீரில் நன்கு கழுவி விட்டு அதன் பிறகு வீட்டில் உள்ள பொருட்களை உபயோக படுத்த வேண்டும். இதனால் பிற உயிர்களையும் நம் தேசத்தையும் பாதுகாக்கலாம்.

எந்த மாதிரி மாஸ்க் பயன்படுத்த வேண்டும்?

பல வகையான முகமூடிகள் (Face Mask) மார்க்கெட்டில் விற்பனைக்கு உள்ளது. மக்கள் அணியும் அறுவை சிகிச்சை முகமூடி சாதாரண மக்கள் போடுவதால் எவ்வித பயனுமில்லை அதுவே நோய்வாய் பட்டவர்கள் அணிந்தால் நோய் பரவாமல் தடுத்து பாதுகாத்து கொள்ளலாம். இருப்பினும், நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், N95 முகமூடிகள் (Face Mask) அணிவது. மிகச் சிறந்தவை" என்று லாண்டன் கூறுகிறார். நீங்கள் எந்த அளவு அணிய வேண்டும் என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அதை எவ்வாறு சரியாக அணிய வேண்டும் என்பது குறித்து நீங்கள் பயிற்சி பெற வேண்டும்.

அப்படி இருந்தும் உங்களுக்கு முகமூடி அணிவதில் சங்கடங்கள் இருந்தால் நீங்கள் தவறாவையை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்றே அர்த்தமாகும். எப்போதும் உங்கள் கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். கைகளை கழுவாமல் உங்கள் முகத்தில் கைகளை வைத்து வீடாதீர்கள். இதனால் நோய் பரவக் கூடிய வாய்ப்பு அதிகம். ஆகையால் நீங்கள் எங்கு சென்று வந்தாலும் முதலில் கைகளை சுத்தம் செய்த பிறகே அடுத்த வேலைகளைப் பார்க்க வேண்டும்.

முககவசம் அணியும் போது இதையும் தவறாமல் பின்பற்றுங்கள்.

  • முககவசம் அணிவதற்கு முன்பு கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவி பிறகு பயன்படுத்துங்கள்.
  • முகத்துக்கு முககவசம் அணியுM போது மூக்கு, வாய்,கன்னம் மூன்று உறுப்புகளும் முழுவதுமாக மறைக்க வேண்டும்.
  • முகமூடியை கழற்றும் போது காதுபகுதியில் இருந்து அகற்ற வேண்டும். நேரடியாக துணிபகுதியில் கைகளை வைத்து அகற்ற வேண்டாம்.
  • ஒரு முறை உபயோகித்து(Use and throw) வெளியே எறியும் முககவசமாக இருந்தால் 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றிவிடுங்கள். அதை வீட்டுக்குள் வைக்காமல் அப்புறப்படுத்துங்கள்.
  • முகமூடியை அணியும் போது உங்களுக்கு நோய் தொற்று இல்லையென்றால் முககவசத்தின் வெள்ளைபக்கத்தை வெளியில் இருக்குமாறு மாட்டிகொள்ளுங்கள். இதனால் வெளியிலிருந்து காற்று மூலம் பரவக்கூடிய நுண்ணுயிரிகள் (Bactriea,Virus,Protosova,Fungui)உங்களை பாதிக்காது.
  • மாறாக நீங்கள் மற்றவர்களை பாதுகாப்பதாக இருந்தால் வெள்ளை பக்கத்தை உங்கள் முகத்தின் பக்கமாக அணிந்துகொள்ளுங்கள்.

Top 5 Questions And Answers For Corona

1 . கொரோனா வைரஸ் என்றால் என்ன?

இது ஒரு நுண் உயிரி, உயிர்கொல்லி நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. கொரோனா வைரஸ் பாதித்தால் சாதாரண சளி முதல் சார்ஸ், மெர்ஸ், நிமோனியா போன்ற தீவிர நோய்கள் ஏற்படும். இறுதியில் உயிரிழப்பு ஏற்படும்.

2 . கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகள்

இந்த வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும். தொண்டை வீங்குவதும், உணவை விழுங்குவதில் சிரமமும் ஏற்படும். சில நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சல் ஏற்படக் கூடும். பிராங்கைட்டிஸ் (bronchitis) எனப்படும் நுரையீரல் நோயும் ஏற்படக்கூடும். ஒட்டு மொத்த சுவாசப் பாதையும் (respiratory track) பாதிக்கப்பட்டு, SARS (Severe Acute Respiratory Syndrome) எனப்படும் உயிரைப் பறிக்கும் மூச்சுத் திணறல் நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

3 . கொரோனா வைரஸ் பரவும் முறை

பாதிக்கப்பட்ட நபரின் இருமல் அல்லது தும்மல் மூலம் பரவும், பாதிக்கப்பட்ட நபர்களை தொடுவதின் மூலமும் பரவும் தன்மை கொண்டது. ஏனவே, மருத்துவமனையிலும் அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

4 . கொரோனா வைரஸ் தற்காத்துக் கொள்வது எப்படி?

ஒவ்வொரு முறை எதையேனும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். டெட்டால், சாவ்லன் போன்ற கிருமி நாசினி சோப்புகள் மற்ற சோப்புகளை விட ஓரளவு மேலானவை. கை, கால் விரல் நகங்கள் நன்றாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தரங்க சுத்தம் மற்றும் உணவுச் சுத்தம் (personal and food hygiene) கறாராகப் பேணப்பட வேண்டும். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரையே அருந்த வேண்டும். இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக வேகவைத்த பின்னரே உண்ணுமாறு WHO .கூறுகிறது. எனவே முக்கால் வேக்காட்டு இறைச்சியை உண்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக அரைவேக்காட்டு (Half boiled) முட்டையை உண்ண வேண்டாம். சீன உணவகங்களுக்குச்சென்று (Chinese restaurants) சீன உணவுகளை உண்பதைப்பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம்.

5 . கொரோனா வைரஸ் எப்படி இருக்கும்?

சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கொரோனா வைரஸின் நுண்ணிய படங்களை வெளியிட்டுள்ளனர். வுஹான் நகரில் இரண்டு நோயாளிகளிடம் இந்த வைரஸ் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள், இந்தப் புதிய கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் விரைவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். அறிகுறிகள் தெரியும் முன்னே தொற்று இருக்கிறதா என்பதை இனி சோதனை செய்துபார்த்துவிடலாம் என மருத்துவ உலகம் தெரிவித்துள்ளது.

For more details click here

What is Corona virus and its History

Comments